நெல்லையில் போக்குவரத்து பாதிப்பு


நெல்லையில் போக்குவரத்து பாதிப்பு
x

ஒருவழிப்பாதையில் லாரி வந்ததால் நெல்லையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பில் இருந்து தச்சநல்லூர் செல்லும் பாதையில் சந்திப்பு பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் முன்பு ஒருவழிப்பாதையில் வந்த லாரி நேற்று மதியம் 1.45 மணிக்கு நின்றது. இதனால் நெல்லை சந்திப்பு அண்ணா சிலை வரையும், வடக்கே உடையார்பட்டி வரையும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அந்த நேரத்தில் அங்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். சுமார் ஒரு மணி வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது. அதன் பிறகு குற்றப்பிரிவு போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டையில் இருந்து நெல்லை டவுனுக்கு ஒரு தனியார் பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் கொக்கிரகுளம் அறிவியல் மையம் பகுதியில் வந்தபோது பஸ்சில் திடீரென்று சத்தம் கேட்டது. பஸ்சை சுற்றி புழுதி பறந்தது. இதை தொடர்ந்து டிரைவர் நிறுத்தி கீழே இறங்கி பார்த்த போது, பஸ்சின் வலதுபுற பின்பக்க டயர் வெடித்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story