தண்டு மாரியம்மன் கோவில் அருகே போக்குவரத்து மாற்றம்

கோவை-அவினாசி ரோட்டில் மேம்பால பணி காரணமாக தண்டு மாரியம்மன் கோவில் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை-அவினாசி ரோட்டில் மேம்பால பணி காரணமாக தண்டு மாரியம்மன் கோவில் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
கோவை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண சிக்னல் இல்லா நடைமுறையை போக்குவரத்து போலீசார் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
இதன்படி சுங்கம், சிங்காநல்லூர், லட்சுமி மில் சிக்னல், புரூக்பாண்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் சிக்னல்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னலில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
மாற்றம்
இதையடுத்து நேற்று முதல் இந்த சிக்னல் செயல்பாட்டை போக்குவரத்து போலீசார் நிறுத்தினர்.
இதன்படி போலீஸ் கமிஷனர் அலுவலம், கோர்ட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் உப்பிலி பாளையம் சிக்னலில் இருந்து இடது பக்கம் திரும்பி தண்டு மாரியம்மன் கோவில் அருகே சாலையை கடந்து எல்.ஐ.சி. சிக்னல் வழியாக செல்லலாம்.
இதேபோல் நஞ்சப்பா ரோட்டில் இருந்து ரெயில் நிலையம், உக்கடம் செல்லும் வாகனங்கள் தண்டுமாரியம்மன் கோவில் அருகே திரும்பி செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.