வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்


வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
x

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை,

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தியன்று, நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள். ஆகவே அன்றைய தினம், காலை 7 மணி முதல் அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story