சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு


சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு
x

சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

விருதுநகர்

சாத்தூர்

சாத்தூர் மெயின்ரோடு, பழைய படந்தால் ரோடு மற்றும் வெம்பக்கோட்டை ரோடு, வெங்கடாசலபுரம் சர்வீஸ் ரோடு பகுதிகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகின்றன. சாலைகளில் திரியும் மாடுகள், ஆடுகள் போன்றவற்றை கட்டுப்படுத்த கடந்த காலங்களில் நகராட்சி நிர்வாகம் அவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர். இதன் காரணமாக மாடுகள் ரோட்டில் உலா வருவது கட்டுப்படுத்தப்பட்டது. வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். தற்போது கட்டுப்பாடு இன்றி உலா வரும் மாடுகளால் தினந்தோறும் ரோட்டில் பயணம் செய்பவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story