1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ரெயில்வே கேட் மூடப்பட்டதால் நீ்டாமங்கலத்தில், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர்
நீடாமங்கலம்;
நீடாமங்கலத்தில் நேற்று அதிகாலை சுமார் 1 மணிநேரம் எரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ெரயில்வேகேட் நேற்று அதிகாலை சுமார் 4.50 மணிக்கு மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூரிலிருந்து காலிபெட்டிகளுடன் கூடிய சரக்கு ெரயில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு வந்தது.பின்னர் சரக்கு ெரயிலின் என்ஜின் திசைமாற்றும் பணி நடந்தது. அந்த பணிமுடிந்த பின் 5.42 மணிக்கு சரக்கு ெரயில் மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. தொடர்ந்து 5.47 மணிக்கு ெரயில்வே கேட் திறக்கப்பட்டு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டு சென்றன. சுமார் 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story