ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல்


ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல்
x

ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல்

திருவாரூர்

நீடாமங்கலம்

நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்தனர்.

நீடாமங்கலம் ரெயில் நிலையம்

நீடாமங்கலம் ெரயில் நிலையம் வழியாக நாள்தோறும் பயணிகள் ெரயில்கள், எக்ஸ்பிரஸ் ெரயில்கள், சரக்கு ெரயில்கள் சென்று வருகின்றன. இவை தவிர வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயில்களான திருப்பதி, ஜோத்பூர் ரெயில்களிலும் சென்று வருகின்றன. தற்போது வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிற்காக சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ெரயில்கள் மட்டுமில்லாமல் மன்னார்குடியிலிருந்து ஜோத்பூர் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயில் திருச்சியில் பராமரிப்பு பணிகளை முடித்துக்கொண்டு நேற்று காலை நீடாமங்கலம் ெரயில் நிலையம் வந்தது. பின்னர் என்ஜினை திசைமாற்றி மன்னார்குடி செல்லும் பணியும் நடந்தது.

போக்குவரத்து நெரிசல்

இதற்காக நேற்று மதியம் வரை 10 தடவைக்கு மேல் ெரயில்வேகேட் மூடப்பட்டது. இதன் காரணமாக நீடாமங்கலத்தில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகனங்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தன. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலைகளை கடக்க முடியாமல் அவதியடைந்தனர்.

இதனை போக்க தஞ்சையில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான இருவழிச்சாலை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும். நீடாமங்கலம் மேம்பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story