கோவூர் அருகே மேம்பாலத்தின் கீழ் குண்டும் குழியுமான சாலையால் வாகன நெரிசல்


கோவூர் அருகே மேம்பாலத்தின் கீழ் குண்டும் குழியுமான சாலையால் வாகன நெரிசல்
x

கோவூர் அருகே மேம்பாலத்தின் கீழ் குண்டும் குழியுமான சாலையால் வாகன நெரிசல் அதிகமாகியுள்ளது.

திருவள்ளூர்

குன்றத்தூர்,

குன்றத்தூர் - போரூர் சாலை தினந்தோறும் வாகனங்கள் அதிக அளவில் செல்லக்கூடிய சாலையாக உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் அதிக அளவில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளும் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், கோவூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுவதால் அந்த பகுதி குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் காலை, மாலை இரு வேளைகளில் வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து செல்கின்றன.

சாலையின் இரு புறங்களிலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அனிவகுத்து நிற்கின்றன குறிப்பாக கோவூரில் இருந்து மவுலிவாக்கம் வரையிலும் வாகனங்கள் அனிவகுத்து நிற்கின்றன.

காலை, மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் நெடுஞ்சாலை துறையினர் மேம்பாலத்தின் கீழ் உள்ள இந்த சாலை சேதம் அடைந்ததால் பேவர் பிளாக் சாலையாக அமைத்தனர் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் தற்போது சாலை சேதம் அடைந்துள்ளது எனவே சேதம் அடைந்துள்ள இந்த சாலையை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story