வேலூரில் போக்குவரத்து நெரிசல்


வேலூரில் போக்குவரத்து நெரிசல்
x

வேலூரில் நேற்று இரவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் பஸ் நிலையம் விடுமுறை நாட்களில் பரபரப்பாக காணப்படும். சென்னை, சித்தூர், ஆந்திரா மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து உள்ளது. இதனால் முக்கிய அரசு விடுமுறை நாட்களிலும், விழாக்காலங்களிலும் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை ஆகியவை சேர்ந்து வருவதால் சென்னையிலிருந்து வேலூருக்கும், வேலூரிலிருந்து பிற மாவட்டங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதனால் நேற்று சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களால் வேலூர் பஸ் நிலையம் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. மேலும் சிறப்பு பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டதால் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story