போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி உயர்த்தப்பட்ட அபராதத்தை விதித்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். அதில் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது. மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது. செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றக்கூடாது. ஆம்புலன்சு, தீயணைப்பு வாகனம், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு வழி விட்டு செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்த கூடாது. போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசங்கள் இடம் பெற்றிருந்தது.