320 பேரின் டிரைவிங் லைசென்சு ரத்து


320 பேரின் டிரைவிங் லைசென்சு ரத்து
x

320 பேரின் டிரைவிங் லைசென்சு ரத்து

திருப்பூர்

பல்லடம்

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் போக்குவரத்து இன்ஸ்பெக்ட்டர் திருநாவுக்கரசு தலைமையில் போலீசார் பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இரு சக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 244 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களை ஓட்டிச்சென்ற 76 பேர் என பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 1,349 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.9 லட்சத்து 9 ஆயிரத்து 700 வசுலிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 320 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

----------------------------


Related Tags :
Next Story