பாதியில் நிற்கும் பாலத்தால் போக்குவரத்துக்கு இடையூறு


பாதியில் நிற்கும் பாலத்தால் போக்குவரத்துக்கு இடையூறு
x

முருங்கப்பாளையம் இட்டடேரி சாலையில் கழிவு நீர் பாலத்திற்கான கட்டுமான பணி பாதியில் நிற்பதால் வாகனப்போக்குவரத்துக்கு இடையூறு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் முருங்கப்பாளையம் இட்டடேரி சாலையில் கழிவு நீர் பாலத்திற்கான கட்டுமான பணி பாதியில் நிற்பதால் வாகனப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

நடுரோட்டில் கற்குவியல்

திருப்பூர் காலேஜ் ரோட்டில் இருந்து முருங்கப்பாளையம் செல்லும் வழியில் இட்டேரி சாலை உள்ளது. இங்கு ரோட்டின் குறுக்காக கழிவு நீர் கால்வாய்க்கான சிறிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது பாதி இடத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள இடத்தில் பாலம் கட்டப்படாமல் உள்ளது. இதனால் இங்கு நடு ரோட்டில் மேடு, பள்ளமாக உள்ளது. அதுமட்டுமின்றி ரோட்டின் நடுவே கற்கள் குவித்து போடப்பட்டுள்ளது. மேலும் ராட்சத இரும்பு குழாயும் ரோட்டின் நடுவே உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. கார்களின் அடிப்பகுதியில் கற்கள் இடித்து வாகனங்கள் சேதம் அடைகிறது.

வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு

இதேபோல் இப்பகுதியில் வாகனங்கள் அதிகமாக செல்லும் போது போதுமான இடவசதியின்றி இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கற்களில் சிக்கி நிலைதடுமாறுகின்றனர். குறிப்பாக ரோட்டின் வளைவான பகுதியில் கற்களும், இரும்பு குழாயும் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.


Related Tags :
Next Story