3 கிலோ கஞ்சா கடத்தல்

3 கிலோ கஞ்சா கடத்தல்
சுல்தான்பேட்டை
கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் வருகின்றனர்.
இந்தநிலையில் சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் ஏட்டு ராமகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் வரதராஜன், வெற்றிவேல் அடங்கிய குழுவினர் செலக்கரிச்சல் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அதில் வைத்திருந்த பெரிய பண்டல்களை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிராம் பாரிக்(வயது 38) என்பதும், கஞ்சாவை விற்பனை செய்ய கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.






