கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும்


கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 May 2023 1:00 AM IST (Updated: 24 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஜமாபந்தி

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்ப்பாயம்) நேற்று தொடங்கியது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.

அப்போது தாசில்தார் வைரமுத்து, நேர்முக உதவியாளர் அரசகுமார், அ.தி.மு.க. கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் திருஞானசம்பந்தம், வடக்கு ஒன்றிய குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி, நிர்வாகிகள் வீராசாமி, சுரபி ரமேஷ், செந்தில், குரு, பத்மநாபன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

48 மனுக்கள் பெறப்பட்டன

முதல் நாள் ஜமாபந்தியில் பட்டா மாறுதல், பொதுக்கழிப்பிடம், ரேஷன் கார்டு உள்பட மொத்தம் 48 மனுக்கள் பெறப்பட்டன.

இன்று (புதன்கிழமை) பொள்ளாச்சி வடக்கு உள்வட்டத்திற்கு உட்பட்ட பூசநாயக்கன்தளி, குள்ளிசெட்டிபாளையம், சந்தே கவுண்டன்பாளையம், ஒக்கிலிபாளையம், காபிலிபாளையம், சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம், ஆச்சிப்பட்டி, குரும்பபாளை யம், குள்ளக்காபாளையம், தொப்பம்பட்டி, வெள்ளாளபாளை யம், அனுப்பர்பாளையம், ராசக்காபாளையம், புளியம்பட்டி, கிட்டசூராம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, சங்கம்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது.

கனிம வளங்கள் கடத்தல்

ஜமாபந்திக்கு வந்த பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

கள்ளச்சாராயம் குடித்தும், மதுபான பாரில் மது குடித்த 2 பேரும் இறந்து உள்ளனர். மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு வழியாக கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமவளங்களை ஏற்றி செல்வதால் சாலை மோசமாகி விட்டது.

குவாரிகளில் 200 அடி ஆழம் தோண்டி உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து முழுமையாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story