வலிப்பு நோயால் பரிதாபம்: உடலில் வெந்நீர் கொட்டி படுகாயம் அடைந்த பெண் சாவு


வலிப்பு நோயால் பரிதாபம்: உடலில் வெந்நீர் கொட்டி படுகாயம் அடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 27 April 2023 12:11 AM IST (Updated: 27 April 2023 3:32 PM IST)
t-max-icont-min-icon

வலிப்பு நோயால் உடலில் வெந்நீர் கொட்டி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி குணமல்லி (வயது 45). இவர் கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 14-ந் தேதி குணமல்லி தனது வீட்டின் வெளியே விறகு அடுப்பில் உணவு சமைப்பதற்காக வெந்நீர் வைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கீழே விழுந்த குணமல்லியின் கால்பட்டு அடுப்பில் இருந்த வெந்நீர் அவர் மேலே கொட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி குணமல்லி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story