ராமேசுவரம் - ஹூப்ளி ரெயில் சேவை நீட்டிப்பு


ராமேசுவரம் - ஹூப்ளி ரெயில் சேவை நீட்டிப்பு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ராமேசுவரம் - ஹூப்ளி இடையேயான சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ராமேசுவரம் - ஹூப்ளி இடையேயான சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ரெயில் சேவை

அகில இந்திய புண்ணியதலமான ராமேசுவரம் முதல் கர்நாடகா மாநிலம் ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்சேவை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில்சேவை நேற்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த ரெயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்று 'தினத்தந்தி'யில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தநிலையில் பயணிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்த தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் ராமேசுவரம் - ஹூப்ளி இடையேயான வாராந்திர சிறப்பு கட்டண ெரயில் சேவையை நீட்டிக்க ஏற்பாடு செய்து உள்ளது. இதன்படி ஹூப்ளி - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு கட்டண ெரயில் (07355) ஹூப்ளியில் இருந்து அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் ராமேசுவரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ெரயில் (07356) ராமேசுவரத்தில் இருந்து அக்டோபர் 2-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

மகிழ்ச்சி

இந்த ரெயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், எஸ்வந்த்பூர் (பெங்களூரு), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்லும். பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரெயில் சேவையை நீட்டித்ததற்கு பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story