ராமேசுவரம்-மதுரை ரெயில் நடுவழியில் நிறுத்தம்


ராமேசுவரம்-மதுரை ரெயில் நடுவழியில் நிறுத்தம்
x

ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலின் அபாய சங்கிலியை மர்மநபர் பிடித்து இழுத்ததால் நடுவழியில் நின்றது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலின் அபாய சங்கிலியை மர்மநபர் பிடித்து இழுத்ததால் நடுவழியில் நின்றது.

பயணிகள் ரெயில்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 5.50 மணிக்கு மதுரைக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு உள்ளது. இந்த ரெயிலானது பாம்பன் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த ரெயிலில் பயணம் செய்த ஒருவர் பெட்டியில் அபாய சங்கலியை இழுத்ததால் ரெயிலானது உடனடியாக ரெயில்வே பாலத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பெட்டியில் ஏறி அங்கே இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அபாய சங்கிலியை இழுத்த நபர் யார் என தெரியவில்லை.

அரை மணிநேரம் தாமதம்

தொடர்ந்து அந்த லாக் சரி செய்யப்பட்டு அரைமணி நேரம் தாமதத்திற்கு பின்னர் மீண்டும் பாம்பனில் இருந்து மதுரை நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.


Next Story