எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மதுபாட்டில் வீச்சு


எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மதுபாட்டில் வீச்சு
x

எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மதுபாட்டில் வீசப்பட்டதில் பயணி படுகாயம் அடைந்தார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டு உள்ளது. இந்த ரெயிலானது தங்கச்சிமடத்திற்கும்- பாம்பனுக்கும் இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இந்த ரெயில் பெட்டிகளை நோக்கி மர்ம நபர்கள் சிலர் மது பாட்டிலை வீசி உள்ளனர். இதில் எஸ் 9 முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டம் கீழவாக்கம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 36) என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே மண்டபம் ரெயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து அவர் அதே ரெயிலிலேயே பயணம் செய்தார். சென்னை ரெயில் மீது மர்ம நபர்கள் சிலர் மது பாட்டில்களை வீசியுள்ளதுடன் இதில் ராமேசுவரம் கோவிலுக்கு உழவாரப் பணிக்கு சென்று ரெயிலில் திரும்பியவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story