கூடல்நகர் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்து மீட்பு ஒத்திகை


கூடல்நகர் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்து மீட்பு ஒத்திகை
x

கூடல்நகர் ரெயில் நிலையத்தில் ரெயில் விபத்து மீட்பு ஒத்திகை

மதுரை

மதுரை கோட்ட ரெயில்வே சார்பில், கூடல்நகர் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில் விபத்து மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்காக பயணிகள் செல்லும் ரெயில் பெட்டி தண்டவாளம் அருகே கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. இதனை விபத்தாக கருதி, ரெயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்த அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. உடனடியாக அவசர சிகிச்சைக்கான மருந்து பொருட்கள் கொண்ட மருத்துவ சிகிச்சை பெட்டி, கிரேனுடன் கூடிய விபத்து மீட்பு ரெயில் மதுரையிலிருந்து கூடல்நகருக்கு புறப்பட்டது. அதேபோல, கோட்ட அளவிலான அனைத்து பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து துணை கமிஷனர் வைத்தியலிங்க தலைமையில் 30 பேர் வந்திருந்தனர். ரெயில் பெட்டியின் மேல் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் துளையிடப்பட்டு சித்தரிக்கப்பட்ட காயம் அடைந்த பயணிகள் வெளியே கொண்டு வரப்பட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் காயம் அடைந்ததாக சித்தரிக்கப்பட்ட அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கோட்ட முதுநிலை பாதுகாப்பு அலுவலர் முகைதீன் பிச்சை, முதுநிலை சிக்னல் மற்றும் தொலைதொடர்பு என்ஜினீயர் ராம்பிரசாத், முதுநிலை மெக்கானிக்கல் என்ஜினீயர் சதீஸ் சரவணன், முதுநிலை இயக்க மேலாளர் மது, உதவி வர்த்தக மேலாளர் பிரமோத்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் சுபாஷ் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.


Next Story