ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
திருவாரூரில், தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலியானார். புத்தாண்டை கொண்டாட நண்பர்களுடன் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
திருவாரூர்;
திருவாரூரில், தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலியானார். புத்தாண்டை கொண்டாட நண்பர்களுடன் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
புத்தாண்டை கொண்டாட
திருவாரூர் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவா் தெட்சிணாமூர்த்தி. இவருடைய மகன் விக்கி என்கிற கணேசன்(வயது 20).நேற்று முன்தினம் இரவு கணேசன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் திருவாரூர் ரெயில் நிலையம் அருகே சென்றாா்.
ரெயிலில் அடிபட்டு பலி
அப்போது அவர் தண்டவாளத்தை கடந்து ரெயில்வே காலனி பகுதிக்கு செல்ல முயன்றாா். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த சரக்கு ரெயில், கணேசன் மீது மோதியது. இதில் சிறிது தூரம் தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்ட கணேசன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர், திருவாரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.புத்தாண்டு தினத்தன்று ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருவாரூர் ரெயில்வே காலனி பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.