காலை 9 மணி முதல் 10 மணிவரை ரயில் பெட்டி, என்ஜினை தடம் மாற்ற கூடாது


காலை 9 மணி முதல் 10 மணிவரை ரயில் பெட்டி, என்ஜினை தடம் மாற்ற கூடாது
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 4 Feb 2023 9:37 AM GMT)

காலை 9 மணி முதல் 10 மணிவரை ரயில் பெட்டி, என்ஜினை தடம் மாற்ற கூடாது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை ெரயில்வே சந்திப்பில் இருந்து ெரயில் போக்குவரத்து, ெரயில் பெட்டிகள் மற்றும் ெரயில் என்ஜின்கள் நாளொன்றுக்கு சுமார் 50 முறை பூம்புகார் கல்லணை சாலையின் குறுக்கே மாப்படுகை பகுதியில் சென்று தடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை காலை 9 மணி முதல் 10 மணி வரை தடம் மாற்றம் செய்யக்கூடாது என ஏற்கெனவே இந்த பகுதி மக்கள் 2 முறை ெரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். அதன்பின்பும் நடவடிக்கை இல்லாததால் அந்த பகுதி மக்கள் ெரயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தி மறித்து போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ெரயில்வே நிலைய மேலாளர் சங்கர்குரு, ெரயில்வே இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 9 மணி முதல் 10 மணிவரை ெரயில் என்ஜின்கள், பெட்டிகளை மாற்ற மாட்டோம் என உத்தரவாதம் அளித்தனர். ஆனால் ஒருவாரம் மட்டுமே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ெரயில் பெட்டி, ெரயில் என்ஜின்களை தடம் மாற்றக்கூடாது என மயிலாடுதுறை ெரயில்வே நிலைய மேலாளரிடம் மாப்படுகை பகுதி மக்கள் நேற்று மீண்டும் மனு அளித்தனர். மீண்டும் இதுபோன்று ெரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்களை தடம் மாற்றுவது தொடர்ந்தால் மக்களை திரட்டி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story