ரெயில் மறியல் போராட்டம் ஒத்தி வைப்பு
முத்துப்பேட்டையில் நாைள நடைபெற இருந்த ரெயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டையில் நாைள நடைபெற இருந்த ரெயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ரெயில் மறியல்
திருவாரூர்- காரைக்குடி அகல ரயில்பாதை தடத்தில் ஒரே ஒரு ெரயில் மட்டும் காலையும் மாலையும் இயங்கி வருகிறது. இந்தநிலையில் தென்னக ரெயில்வே இந்த வழிதடத்தில் தொலைதூரம் செல்லும் பல்வேறு ரயில் சேவையை விரைவில் தொடங்க முடிவு செய்துள்ள நிலையில் முதல் கட்டமாக கடந்த 4-ந்தேதி முதல் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி உள்ளது. ஆனால் இந்த ெரயில் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லைஇதனால் முத்துப்பேட்டை ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் முத்துப்பேட்டை ெரயில் நிலையத்தில் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை கண்டிப்பாக நிறுத்தி இயக்க வலியுறுத்தி நாளை(திங்கட்கிழமை) ெரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அமைதி பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து நேற்று திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலெக்சாண்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்குழு சார்பில் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹீப், துணைத்தலைவர் எம்.சி.சதிஷ்குமார், நிர்வாகிகள் மெட்ரோ மாலிக், நூருல் அமீன், அதிகாரிகள் தரப்பில் தென்னக ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பிரத்திராஜ், தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் சீனு, வருவாய்த்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
ஒத்தி வைப்பு
கூட்டத்தில், முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில், எர்ணாகுளம்- – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தம் செய்து இயக்க செல்ல தொடர்ந்து ரயில்வே போக்குவரத்து ஆய்வாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அதற்கான நடவடிக்கை மேலும் துரிதப்படுத்தப்படும்.இனிவரும் காலங்களில் வரும் எக்ஸ்பிரஸ் ெரயில்கள் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தவும் ரயில்வே பயணசீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்திட வலியுறுத்தியும், ரயில் நிலையத்தை தரம் உயர்த்த உயர் அலுவலர்களிடம் வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்னக ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் உறுதியளித்தார். எனவே நாளை(திங்கட்கிழமை) நடைபெற்ற இருந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.