ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி


ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
x

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

திருவரங்கம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொடர்பான பயிற்சி விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது. அப்போது இந்திய விவசாயத்தில் பருத்தி பயிரின் பங்கு பற்றி முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கேசவராமன் எடுத்துக் கூறினார். தொடர்ந்து வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பாஸ்கரமணியன் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையின் பல்வேறு கூறுகள் பற்றியும் ஒருங்கிணைந்த முறையில் சாகுபடி செய்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். பின்னர் பேசிய ஞான வீரன் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மூலம் பருத்தியில் பூச்சிகளை நிர்வாகம் செய்யும் முறைகள் குறித்து விரிவாக பேசினார். பின்னர், மஞ்சள் ஒட்டுப் பொறி மற்றும் இனக் கவர்ச்சி பொறிகளை கொண்டு பருத்தியில் காய்ப் புழுக்களை கவர்ந்திழுத்து அழிப்பது தொடர்பாக செயல் விளக்கம் துணை வேளாண்மை அலுவலர் தனதுரை செய்து காண்பித்தார்.அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுகன்யா நன்றி கூறினார். பயிற்சியில் திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் மற்றும் சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story