வருவாய் துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி


வருவாய் துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி
x

வருவாய் துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் வருவாய் தீர்வாய தணிக்கை முடிவு அறிக்கை தயார் செய்தல் தொடர்பாக இந்த தாலுகாவில் பணிபுரிந்து வரும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி தாசில்தார் செந்தில்வேல் முருகன் தலைமையில் நடை பெற்றது. இதில் புள்ளியியல் துறை துணை இயக்குனர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பயிற்சிஅளித்தார். இதில் புள்ளியியல் துறை உதவி இயக்குனர் பூங்கொடி, துணை தாசில்தார்கள் ஜஸ்டின் பெர்னாண்டோ, கோகிலா, வருவாய் ஆய்வாளர்கள் மெய்யப்பன், ஷகிலா பேபி, குமார், சிதம்பரம், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story