மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி


மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி
x

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டது.

களப்பயிற்சி கூட்டம்

சிங்கம்புணரி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை கழகத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஆர்- 75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகப் பகுதியில் சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்து சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி கழகத்தில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு களப்பயிற்சி கூட்டம் நடத்தப் பட்டது.

கூட்டத்திற்கு வந்த அனைவரையும் திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பொதுமேலாளர் குமரகுருபரன் வரவேற்றார். சங்கத்தின் துணைத் தலைவர் இந்தியன் செந்தில்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

பயிற்சியாளர் சோமசுந்தரம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். சிவகங்கை கூட்டுறவு மேளாண்மை பயிற்சி கழகத்தில் படிக்கும் சுமார் 60 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர்களுக்கான 10 மாதம் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பயிற்சி

மாணவ-மாணவிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த செயல்விளக்க முறைகள் மற்றும் பயிற்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மாணவ-மாணவிகள் சிவகங்கை தென்னை உற்பத்தியாளர் கம்பெனியை பார்வையிட்டனர். கம்பெனி இயக்குனர் மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிங்கம்புணரியில் உள்ள ஆர். 75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செய்திருந்தது.


Next Story