சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

சீருடை பணியாளர் தேர்வுக்குழு அறிவித்த காவலர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தபட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழு அறிவித்த காவலர் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தபட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காலிப்பணியிடங்கள்
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 3,552 காலிப்பணியிடங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் இந்த அலுவலகத்தின் மூலம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டி தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04575-240435 எண்ற எண்ணை தொடா்பு கொண்டோ தங்களது வருகையை உறுதி செய்து கொள்ளலாம்.
பயன்பெறலாம்
மேலும், சீருடை பணியாளார் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in, என்ற இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து, போட்டி தேர்வுக்கான பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். அத்துடன் சமீபத்தில் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள கல்வி தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மீண்டும் மறுஒளிபரப்பாக இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்புகளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






