இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
மானாமதுரை,
மானாமதுரையில் ஒ.வெ.செ. மேல்நிலைப்பள்ளியில் தன்னார்வலர்களுக்கான கற்றல் கற்பித்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ், பள்ளியின் தலைமையாசிரியர் முருகன், சிவகங்கை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லம் தேடி கல்வியின் ஒன்றிய ஆசிரியரும், ஒருங்கிணைப்பாளருமான முருகன் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் கலா திட்டம் குறித்து விளக்கி பேசினார். தேவகோட்டை, திருப்பத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியசாமி, கணேசன் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளர்களாக மதியழகன், மாயகிருஷ்ணன், ரமேஷ்குமார், முருகன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் ஈடுபாடு, அறிவியல் செயல்பாடுகள், ஆடல், பாடல், கதை சொல்லுதல், விடுகதைகள் மூலம் பயிற்சியளித்தனர். முடிவில் ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் பூமிநாதன் நன்றி கூறினார்.