புத்தாக்க பயிற்சி
இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
சிவகங்கை
இளையான்குடி,
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. தமிழ் துறை உதவி பேராசிரியர் அப்துல் ரஹீம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பாக அதன் தலைவர் பகீரத நாச்சியப்பன் கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார். பொருளாளர் ராமமூர்த்தி மனிதம் செம்மையுற மனவளக்கலை எனும் தலைப்பில் பேசினார். செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் காலத்தால் செய்யும் முதல் உதவி எனும் தலைப்பில் பேசினார். இதில், செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் நர்கீஸ் பேகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story