எருமப்பட்டியில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி


எருமப்பட்டியில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 2:10 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எருமப்பட்டி:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் எருமப்பட்டி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

எருமப்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவகுமார் பயிற்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாற்றுத்திறன் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது?, அவர்களுக்கான திட்டங்கள், நிதியுதவிகள், மருத்துவம், பயிற்சி குறித்து வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பெரியசாமி, டாக்டர்கள், செவிலியர்கள் விளக்கமாக கூறினர். இதில் சிறப்பு ஆசிரியர்கள் ராஜா, குமார், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கற்பகம், தனபால், செல்வகுமார், மஞ்சுளா, ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story