மத்திய அரசின் தேர்வுகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி-2-ந் தேதி தொடங்குகிறது


மத்திய அரசின் தேர்வுகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி-2-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

மத்திய அரசின் தேர்வுகளுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு 2-ந் தேதி தொடங்குகிறது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் தேர்வுகள்

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டபூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப்- பி, குரூப்- சி நிலையில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்விற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இந்த தேர்விற்கு வருகிற 3-ந் தேதிக்குள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கணினி முறை தேர்வுகள் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பயிற்சி வகுப்பு

இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வருகிற 2-ந் தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பெயர், முகவரி மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் ஏற்கனவே பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயிற்சி பெற்றதில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு 17 பேர் தேர்வாகி உள்ளனர். மேலும் குரூப் 4 தேர்வில் 14 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளதும், 3 பேர் முதல் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story