இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
பரமத்திவேலூர்:
பரமத்தி வட்டார வள மையம் சார்பில் 'ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா' என்ற தலைப்பில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் 30 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை தாங்கினார்.
வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் சுபா பயிற்சியை தொடங்கி வைத்தார். வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வராணி பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார். வானவில் மன்ற கருத்தாளர்கள் பூங்கோதை, ரேவதி ஆகியோர் அறிவியல், அற்புதங்கள், அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாடு, விளையாட்டு முறை மற்றும் கணிதம் ஆகியவற்றை தன்னார்வலர்களுக்கு செயல்பாடுகள் வாயிலாக விளக்கினர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் ராஜா, பார்வதி மற்றும் பரமத்தி வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பார்த்தசாரதி ஆகியோர் செய்திருந்தனர்.