பயிற்சி முகாம்


பயிற்சி முகாம்
x

ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தில் வெம்பக்கோட்டை வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் (அட்மா திட்டம்) கீழ் மாவட்டத்திற்குள் பயிற்சி என்ற இனத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கொங்கன்குளம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்து செல்வி முன்னிலை வகித்தார். வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ஜோதிபாசு, ஆலங்குளம் கால்நடை மருத்துவர் டாக்டர் கார்த்திகா, தூத்துக்குடி வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் தூண்டிகாளை ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை உர நன்மை பற்றியும், மண்புழு உரம் பற்றியும், கால்நடைகளுக்கு இன்சுரன்ஸ் பற்றியும் விளக்கம் அளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ், ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.


Next Story