டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயிற்சி முகாம்
இளையான்குடி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வது குறித்து சிறப்பு முகாம் சாலைக்கிராமம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது
சிவகங்கை
இளையான்குடி,
இளையான்குடி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வது குறித்து சிறப்பு முகாம் சாலைக்கிராமம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. சாலைக்கிராமத்தில் இயங்கும் இந்தியன் வங்கி மேலாளர், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் ஆகியோர் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும் முறை பற்றியும், அதன் பயன்களை பற்றியும் விளக்கம் அளித்தார்கள். சிறப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உதவி திட்ட அலுவலர் விக்டர் பெர்னாண்டஸ் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை இளையான்குடி மகளிர் திட்ட இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தார்கள்.
Related Tags :
Next Story