தொண்டியில் கோடைகால பயிற்சி முகாம்
தொண்டியில் கோடைகால சிறப்பு உடற்கல்வி பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
தொண்டி,
தொண்டியில் கோடைகால சிறப்பு உடற்கல்வி பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. அதன்படி தொண்டியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு தடகளம் மற்றும் குழு விளையாட்டு போன்ற பயிற்சிகளை இலவசமாக அளிக்க உள்ளனர். தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு உடற்கல்வி இயக்குனர் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார்.
உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வகுமார், பிரபு, சிவா, அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் உடற்கல்வி ஆசிரியர் மரியலில்லி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் பயிற்சியை ெதாடங்கி வைத்தார்.
த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் சாதிக்பாட்சா, பரிபாலன சபை தலைவர் ராஜசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் காத்த ராஜா, பெரியசாமி, உடல் கல்வி ஆசிரியர்கள் அஜித், சுவேதா உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியில் தொண்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.