கோடைக்கால கால்பந்து பயிற்சி முகாம்

கோடைக்கால கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் தென்னரசு கால்பந்து கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது. மொத்தம் 30 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சியின் முடிவில் தினந்தோறும் பால், முட்டை மற்றும் பயிர் வகைகள் வழங்கப்பட்டது. நிறைவு நாள் விழாவையொட்டி சிறப்பு விருந்தினராக சிங்கம்புணரி யூனியன் தலைவர் திவ்யாபிரபு, அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரண பொருட்களை வழங்கினர். முகாமிற்கான ஏற்பாடுகளை தென்னரசு கால்பந்து கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






