மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்


மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கையில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகமும் நூலக தன்னார்வலர் குழுவும் இணைந்து கோடை கால பயிற்சி முகாமை நடத்தியது. மாவட்ட மைய நூலகத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்ட நூலக அலுவலர் ஜாண் சாமுவேல் தலைமை தாங்கினார். நூலக தன்னார்வலர் எழுத்தாளர் அ.ஈஸ்வரன் வரவேற்று பேசினார். விழாவில் பொறியாளர் பாரதிதாசன், நூலகர்கள் தவமணி, முத்துக்குமார், கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மாணவ- மாணவிகளின் திறன்களை வளர்க்கும் விதமாக வாசிப்பின் அவசியம் பற்றி ஒவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுபோட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட நூலகத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


Next Story