கண்ணியமான முறையில் விசாரணை போலீசாருக்கு பயிற்சி முகாம்


கண்ணியமான முறையில் விசாரணை போலீசாருக்கு பயிற்சி முகாம்
x

கோப்புப்படம் 

டி.ஜி.பி. சைலேந்திரபாபு இந்த முகாமில் கலந்துகொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வருவோர்களிடம் அத்துமீறல் கூடாது, சித்ரவதை செய்யக்கூடாது போன்றவற்றை நடைமுறைப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக போலீஸ் நிலையங்களில் மரணம் நிகழ்வதை தடுக்கும் நோக்கமாகவும் இந்த நடவடிக்கைகள் உள்ளன.

இதற்காக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. தினமும் 75 முதல் 100 பேர் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்கிறார்கள். டி.ஜி.பி. சைலேந்திரபாபு இந்த முகாமில் கலந்துகொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வருபவர்களை கண்ணியமாக விசாரித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் இந்த பயிற்சி முகாமில் ஆலோசனை வழங்கப்படுகிறது. சிறப்பு வீடியோக்களும் காண்பிக்கப்படுகிறது. டி.ஐ.ஜி. ஆனி விஜயா மேற்பார்வையில் இந்த பயிற்சி முகாம் நடந்து வருகிறது.


Next Story