விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்


விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 31 Aug 2023 7:30 PM GMT (Updated: 31 Aug 2023 7:30 PM GMT)

நயினார்கோவில் அருகே விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

நயினார்கோவில் வட்டார வேளாண்மைத்துறை சார்பாக பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நயினார்கோவிலில் நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குனர் தலைமை தாங்கி அங்கக பண்ணைகளின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் பாலாஜி இயற்கை பண்ணையத்தின் கூறுகள் பற்றி விளக்கினார். ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், பஞ்சகாவியம், மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து செயல் விளக்கமும் அளித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் பானுபிரகாஷ் பசுந்தாள், உரப்பயிர் சாகுபடி, இயற்கை வேளாண்மையில் பயிர் பாதுகாப்பு முறைகள் பற்றியும், விதை சான்று உதவி இயக்குனர் சிவகாமி பங்களிப்பு உறுதியளிப்பு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து அங்கக சான்று பெரும் நடைமுறைகள் பற்றியும், விதை சான்று அலுவலர்கள் சீராளன், வீரபாண்டியன் அங்கக சான்று நடைமுறைகள் குறித்தும், வேளாண்மை அலுவலர் பிரியா வேளாண் மானிய திட்டங்கள் பற்றியும் பேசினர். உதவி வேளாண்மை அலுவலர் லாவண்யா உயிர் உர விதை நேர்த்தி செயல் விளக்கம் அளித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story