விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்


விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 25 Jun 2023 10:46 AM GMT)

விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே கே.நெடுவயல் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கிசான் கோஸ்திஸ் விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கே.நெடுவயல் ஊராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் அம்சவேணி முன்னிலை வகித்தார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட இந்த கிராமத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் நோக்கத்தில் 15 ஏக்கர் கொண்ட தரிசு நிலத்தொகுப்பு தேர்வு செய்யப்பட்டு ஆழ்துளை கிணறு, சோலார் மோட்டார் இணைப்பு, நுண்ணீர் பாசனம் அமைத்து, பழ மரக்கன்று நடுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பண்ணை கருவிகள், விவசாய இடுபொருட்கள், தார்ப்பாய் வழங்குதல் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. இதில் பல்வேறு துறை சார்ந்த அதிரிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு விவசாயம் சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இயற்கை முறையில் விவசாயம் சாகுபடி செய்யும் முறைகள் குறித்து இயற்கை விவசாயி சிவராமன் எடுத்து கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.புதூர் வேளாண்மைத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.


Next Story