போலீசாரின் குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்
போலீசாரின் குழந்தைகளுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.
கோயம்புத்தூர்
கோவை மாவட்ட போலீசாரின் குழந்தைகள் கோடை கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் கோடை கால சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதை போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தொடங்கி வைத்தார்.
முகாமில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைதல், ஓவியங்களின் முக்கியத்துவம், உடற்பயிற்சி மற்றும் கைப்பந்து பற்றிய அறிமுக பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகிறது.
இந்த முகாம் வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.
போலீசாரின் குழந்தைகளுக்கு இத்தகைய ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story