போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி முகாம்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 2 July 2023 8:37 PM GMT (Updated: 3 July 2023 10:55 AM GMT)

கும்பகோணத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் போலீஸ் துறை சார்பில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பொதுப் பிரிவு மற்றும் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமை தாங்கினார்.இதில் கும்பகோணம் சரக இன்ஸ்பெக்டர்கள் நாகலட்சுமி, கவிதா, சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் பேசியதாவது:-

தகுதித் தேர்வுக்கு செல்பவர்கள் (இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்), பொது அறிவு (விஞ்ஞானம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், இந்திய அரசியல், தற்கால நிகழ்வுகள்), உளவியல் (தருக்கப் பகுப்பாய்வு, எண் பகுப்பாய்வு, தகவல்தொடர்புத் திறன், செய்திகளைக் கையாளும் திறன், அறிவாற்றல் திறன்) வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 தமிழ் நாளிதழ்கள் படிக்க வேண்டும்.குற்ற சம்பவங்களை குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மதுரையை சேர்ந்த பழனி குமார் பயிற்சி அளித்தார்.


Next Story