தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:-

கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் விடுமுறையில் இருந்ததால் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் வாசித்தல், எழுதுதல் கணித செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் கற்று கொள்ளும் வகையில் தமிழக அரசு எண்ணும், எழுத்தும் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக வேதாரண்யத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் எளிய முறையில் கணக்குகளை கற்று தருவது குறித்தும், பொம்மலாட்டம் மூலம் கணக்குகளை அறிந்து கொள்ளும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியின் நிறைவு விழாவில்நாகை மாவட்ட கல்வி அலுவலர் மதிவாணன், வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம், மாநில கருத்தாளர்கள் சித்திரவேல், வசந்தா, பயிற்றுனர்கள் மாரிமுத்து, வீரசேகரன், கந்தசாமி உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story