அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு
அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
சமூக பாதுகாப்பு துறை குழந்தைகள் நலன் குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் வெம்பக்கோட்டை வட்டாரத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளருக்கான பயிற்சி வகுப்பு வெம்பக்கோட்டை யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செல்வராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். குழந்தை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. முடிவில் சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் முருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story