மின் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு
பாதுகாப்பான முறையில் பணி புரிவது குறித்து மின் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், வடக்கு உபகோட்டத்தில் பணியாற்றும் மின் பணியாளர்களுக்கு வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கும், பாதுகாப்பான முறையில் பணிபுரிவது குறித்து பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. பயிற்சிக்கு உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகம் தலைமை தாங்கினார்.இதில் உதவி பொறியாளர்கள் ராஜேந்திரன், சதீஷ்குமார், ராஜசேகர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில், மின் பணியாளர்கள் கையுறை அணிந்து மின்சாரத்தை நிறுத்த வேண்டும். பின்னர் எர்த் ராடு பயன்படுத்த வேண்டும். மின்கம்பம் மற்றும் மின் மாற்றிகளில் பணியாற்றும் போது, இடுப்பில் கட்டாயம் கயிறு அணிய வேண்டும். பணியாளர்கள் வேலையில் ஈடுபடும்போது செல்போனை பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story