சிற்ப கலைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு


சிற்ப கலைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 13 July 2023 6:45 PM GMT (Updated: 13 July 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் சிற்ப கலைஞர்களுக்கான பயிற்சி வகுப்பு 2 நாட்கள் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழு ஆகியவை இணைந்து 18 வயதிற்கு மேற்பட்ட ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது அதன்படி .கள்ளக்குறிச்சியில் உள்ள அண்ணா நகர் மற்றும் தென்கீரனூர் ஆகிய இடங்களில் மாவட்ட மரசிற்ப கலைஞர்கள், சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு, விருக்சா மரசிற்ப பொதுப்பணிக்கூட்டமைப்பு கட்டடத்தில் வருகிற 17, 18 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் புகழ் பெற்ற ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்கள் கலந்து கொண்டு மரபு பாணி ஓவியம், நவீன பாணி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம் மற்றும் மரச்சிற்ப ஓவியங்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர். இதில் கலந்து கொள்பவர்களுக்கு நிறைவு நாளில் சான்றிதழ் வழங்கப்படும். எனவே இந்த பயிற்சி பெற விரும்பும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்கள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்- (613403) என்ற முகவரிக்கு நேரில் அல்லது தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04362-232252, 94425 07705 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இ்வ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story