தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 2:58 PM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

நாகப்பட்டினம்

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை ஆய்வு செய்ய சென்னை வேளாண்மை இயக்குனர் அண்ணாத்துரை உத்தரவின் படி தொழில்நுட்ப ஆலோசகர் சிவக்குமார் நாகைக்கு வந்தார். நாகை வட்டாரம் பொரவாச்சேரி, குற்றம்பொருத்தானிருப்பு ஆகிய கிராமத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதை உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறையின் விதை வல்லுனரால் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து விதை கிராம திட்டக்கூறுகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமாக்குதல் திட்டம் செயல்படுத்துதல் குறித்து தொழில்நுட்ப ஆலோசகர் அறிவுரை வழங்கினார்.


Next Story