40 விவசாயிகளுக்கு புதுக்கோட்டை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த40 விவசாயிகளுக்கு புதுக்கோட்டை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த40 விவசாயிகளுக்கு புதுக்கோட்டை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு, செங்கம் ஆகிய வட்டாரங்களில் இருந்து 40 விவசாயிகள் புதுக்கோட்டையில் உள்ள தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பயறு வகை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை வட்டார மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் ஆகியவற்றின் சார்பில் இவர்களுக்கு பயிற்சி நடந்தது.
இதில் ஆராய்ச்சி நிலைய தலைவர் யுவராஜா, இணை பேராசிரியர்கள் ராம்ஜெகதீஷ், மேனகா, உமாசங்கரேஸ்வரி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதிய பயறு வகைகள், அவற்றின் தன்மைகள், விதை தேர்வு செய்யும் முறைகள், விதைநேர்த்தி, விதை கடினப்படுத்துதல், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாத்தல், களை கட்டுப்பாடு உர நிர்வாக முறைகள் ஆகியவற்றை வவிசாயிகளுக்கு எடுத்துரைத்தார்கள்.
மேலும் தேசிய பயறுவகை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜசேகரன் விதை உற்பத்தி மற்றும் உருவாக்கம் பற்றியும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் தன்மை பற்றியும் விளக்கினார்.ஏற்பாடுகளை திருவண்ணாமலை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாலமுருகன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுகன்யா, சத்தியநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்