காலை உணவு திட்ட சமையலர்களுக்கு பயிற்சி


காலை உணவு திட்ட சமையலர்களுக்கு பயிற்சி
x

நெமிலியில் காலை உணவு திட்ட சமையலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு வழங்கவுள்ள ரவா கிச்சடி, அரிசி உப்புமா உள்ளிட்ட 14 வகையான காலை உணவை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டது. இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) தாசப்பிரகாஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story