சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி
சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
பொன்னமராவதி ஒன்றியத்தில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் உணவு பரிமாற்றம் செய்திட வட்டார அளவிலான சமையல் பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. வட்டார இயக்க மேலாளர் பவுல்தாஸ் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமிநாதன், நல்லமுத்து, சிங்காரவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜு குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி, சமையல் கூட பொறுப்பாளர்களுக்கான வட்டார அளவிலான சமையல் பயிற்சியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற சமையல் பயிற்சியில் பள்ளி குழந்தைகளுக்கு சுவை மிகுந்த காலை சிற்றுண்டி எவ்வாறு சமைப்பது, சமையல் எரிவாயு எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பயிற்சிகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. பயிற்சியில் ஒலியமங்கலம், ஆலம்பட்டி, நகரப்பட்டி, மறவாமதுரை, கொன்னையம்பட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் வட்டார வள பயிற்றுனர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.