விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 25 Aug 2023 12:30 AM IST (Updated: 25 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் விவசாயிகளுக்கு பயறு ஒன்டர் செயல்விளக்க பயிற்சி நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கற்பகராஜ்குமார் வழிகாட்டுதலின்படி ஜமீன் சிங்கம்பட்டி முன்னோடி விவசாயி வேலம்மாள் வயலில் பயறு ஒன்டரின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கப் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி, ஒரு ஏக்கருக்கு தேவையான 2 கிலோ பயறு ஒன்டரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒட்டுத் திரவம் சேர்த்து பூக்கும் பருவத்தில் காலை அல்லது மாலை வேளையில் கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிப்பதால் பூக்கள் உதிர்வது குறைந்து விளைச்சல் 20 சதவீதம் கூடும், மேலும் இது வறட்சியைக் தாங்கும் தன்மை கொண்டதோடு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது என்று எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story