இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
சின்னசேலத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்,
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் இந்திரா தலைமை தாங்கினார். தனி தாசில்தார்கள் ரஹோத்மன், கமலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ் வரவேற்றார். இதில் இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வண்ணத்தமிழன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வரதராஜன், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர்கள் அளிக்கும் விண்ணப்பங்களை சரிபார்த்து எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினர். இதில் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story